Page Loader
இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி
இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி

இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 14, 2023
10:21 am

செய்தி முன்னோட்டம்

ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ் இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பெர்னாபியூவில் ஸ்பெயினுக்கு எதிராக பிரேசில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் என்று செவ்வாயன்று (ஜூன் 13) அறிவித்தார். ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த வினிசியஸ் ஜூனியருக்கு ஆதரவாக, அவர் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலுக்கு எதிராக இந்த அறிவிப்பு வந்துள்ளது. வினிசியஸ் ஜூனியர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் எனும் நிலையில், ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ரூபியல்ஸ் மற்றும் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் துணைத்தலைவர் எட்னால்டோ ரோட்ரிக்ஸ் ஒன்றாக சந்தித்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

cbf deputy president presses strong action

லா லிகா கால்பந்து தொடரில் தொடரும் இனவெறி தாக்குதல்

கடந்த மே மாதம் வலென்சியாவில் நடந்த லா லிகா போட்டியின் போது 22 வயதான பிரேசிலின் வினிசியஸ் மீது இனவெறி அவமதிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து புகார் செய்யப்பட்டது. இந்த சீசனில் இனவெறி குறித்து வழக்கறிஞர்களிடம் புகாரளிக்கப்பட்ட பத்தாவது சம்பவம் இதுவாகும். இனவெறி குறித்து பேசிய எட்னால்டோ ரோட்ரிக்ஸ், கால்பந்து அதிகாரிகள் இனவெறி வழக்குகளில் கடுமையான தண்டனையைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும், "அபராதம் மட்டும் போதாது. கிளப்புகளும் பொறுப்பேற்க வேண்டும். லீக் நிலைகளில் புள்ளிகளைக் கழித்தல், ஸ்டாண்டுகளை மூடுதல் அல்லது வாழ்நாள் முழுவதும் தடை விதித்தல் போன்ற கடுமையான தடைகளை இனவெறிக்கு எதிராக ஏற்றுக்கொண்ட முதல் கால்பந்து கூட்டமைப்பு பிரேசில் ஆகும்." எனத் தெரிவித்துள்ளார்.