தமிழகத்தில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு! 8.27 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு
செய்தி முன்னோட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று முதல் நாளான மார்ச் 2-இல் தமிழ் மற்றும் இதர மொழி பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு, காலை 10:00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 8 லட்சம் பள்ளி மாணவர்கள், 27,783 தனித்தேர்வர்கள் மற்றும் 281 சிறைக்கைதிகள் அடங்குவர். மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 250 மையங்களில் 67,516 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க 4,540 உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐
— Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) March 2, 2026
அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க. மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்.