பட்ஜெட் நாளில் காஞ்சிபுரம் பட்டு! தனது சொந்த மாநிலத்திற்கு பெருமை சேர்த்த நிர்மலா சீதாராமன்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும், இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி புடவையை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இன்று அவர் தமிழகத்தின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவையை தேர்வு செய்துள்ளார். இன்று அவர் அணிந்துள்ள புடவை, ஊதா நிற புடவையில் இளமஞ்சள் (Golden-brown) நிறக் கட்டம் போட்ட அமைப்பைக் கொண்டது. காபி பிரவுன் நிறக் பார்டரும், ஊதா மற்றும் தங்க நிற பார்டர்கள் கொண்ட கடுகு மஞ்சள் நிற முந்தானையும் இந்தப் புடவைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
வரலாறு
கடந்த காலங்களில் நிர்மலா அணிந்த கைத்தறி புடவைகள்
2019: மங்களகிரி பட்டு (ஆந்திரா) 2021: போச்சம்பள்ளி இக்கட் (தெலுங்கானா) 2022: பொம்காய் பட்டு (ஒடிசா) 2023: இல்கல் புடவை (கர்நாடகா) 2025: மதுபானி ஓவியம் வரையப்பட்ட புடவை (பீகார்) தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது சொந்த மாநிலத்தின் கலை மற்றும் கைத்தறிக்கு மதிப்பளிக்கும் வகையில் காஞ்சிபுரம் பட்டைத் தேர்வு செய்துள்ளார் எனக் கருதப்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கைத்தறி நெசவாளர்களின் திறமையையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக நிர்மலா சீதாராமனின் இந்தப் 'புடவை அரசியல்' தொடர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.