Loading...
7 ஆண்டு நட்பு காதலாக மாறியது! ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவைக் கரம்பிடிக்கும் நடிகை மிருணாளினி ரவி
ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவைக் கரம்பிடிக்கிறார் நடிகை மிருணாளினி ரவி

7 ஆண்டு நட்பு காதலாக மாறியது! ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவைக் கரம்பிடிக்கும் நடிகை மிருணாளினி ரவி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2026
11:06 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை மிருணாளினி ரவி, தனது நீண்ட நாள் நண்பரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான மகாவிஷ்ணுவைக் கரம்பிடிக்க உள்ளார். இருவருக்கும் இடையே சமீபத்தில் நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகை மிருணாளினி ரவி தங்களது சிறப்புமிக்க தருணத்தின் புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

நட்பு 

7 ஆண்டுகால நட்பு காதலாக மாறிய தருணம்

நிச்சயதார்த்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த மிருணாளினி ரவி, "உன்னை நேசிப்பது என்னை நானே நேசிப்பதைப் போல உணர்கிறேன்.

ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நான் உன்னையே தேர்ந்தெடுப்பேன்." என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல மகாவிஷ்ணு தனது பதிவில், "7 ஆண்டுகால எங்கள் நட்பு, எனது வாழ்க்கையின் காதலாக மாறியுள்ளது" என்று தங்களது காதல் பயணத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்

ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துகள்

மிருணாளினி ரவி மற்றும் மகாவிஷ்ணுவின் இந்த நிச்சயதார்த்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகின.

திரையுலகத்தை சார்ந்த நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

பின்னணி

மிருணாளினி ரவி மற்றும் மகாவிஷ்ணு பின்னணி

சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மிருணாளினி ரவி, தொடர்ந்து எனிமி, ஜாங்கோ மற்றும் தெலுங்கில் கட்டாலகொண்ட கணேஷ் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

அவரது வாழ்க்கைத் துணையான மகாவிஷ்ணு பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஆவார்.

ADVERTISEMENT