LOADING...
இசையில் 'அனிருத்' சாம்ராஜ்யம்! சொந்தமாக மியூசிக் லேபிள் தொடங்கினார்
சொந்தமாக ஆடியோ லேபிளை தொடங்கினார் அனிருத்

இசையில் 'அனிருத்' சாம்ராஜ்யம்! சொந்தமாக மியூசிக் லேபிள் தொடங்கினார்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
10:42 am

செய்தி முன்னோட்டம்

முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக 'Albuquerque Records' என்ற சொந்த ஆடியோ லேபிளை தொடங்கியுள்ளார். பிரபல அமெரிக்க தொடரான 'Breaking Bad'-ஆல் ஈர்க்கப்பட்டு தனது ஸ்டுடியோவிற்கும், தற்போது தனது ஆடியோ லேபிளிற்கும் அவர் சூட்டியுள்ளார். இந்த ஆடியோ லேபிளின் மூலம் தனது திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி, Independent Artists படைப்புகளுக்கும் ஒரு சிறந்த தளத்தை உருவாக்க அனிருத் திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே எனக்குச் சுயாதீன இசையில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த லேபிள் எனது திரைப்பட மற்றும் திரைப்படம் அல்லாத படைப்புகளுக்கு ஒரு வீடாக அமையும். திறமையான புதிய கலைஞர்களை உலகிற்கு அடையாளம் காட்டுவதே எங்களது நோக்கம்," என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நிர்வாகம்

லேபிள் நிர்வாகம் மற்றும் வரவிருக்கும் வெளியீடுகள்

இந்த நிறுவனத்தை சோனி மியூசிக் நிறுவனத்தில் நீண்ட அனுபவம் கொண்ட பி. கௌஷிக் தலைமை ஏற்று நடத்த உள்ளார். அனிருத்தின் உலகப்புகழ் பெற்ற 'கொலைவெறி' பாடல் காலத்திலிருந்தே கௌஷிக் அவருடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அல்புகர்க்கி ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அனிருத் இசையமைக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் பாடல்களை வெளியிட உள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்தின் 173-வது படம் (Coolie-2), விஜய்யின் 'ஜனநாயகன்', ஷாருக்கானின் 'கிங்', வெற்றிமாறனின் 'அரசன்', நாணியின் 'தி பாரடைஸ்', அருண் மாதேஸ்வரனின் 'DC' உள்ளிட்ட படங்களின் ஆடியோ இந்த லேபிள் கீழ் வெளியாகும்.

Advertisement