Loading...
இலங்கை செல்ல திட்டமா? இந்திய பயணிகள் முன்கூட்டியே ETA அனுமதியின்றி பயணிக்கலாம்; தற்காலிக சலுகை அறிவிப்பு
இந்திய பயணிகள் முன்கூட்டியே ETA அனுமதியின்றி இலங்கை செல்லலாம்

இலங்கை செல்ல திட்டமா? இந்திய பயணிகள் முன்கூட்டியே ETA அனுமதியின்றி பயணிக்கலாம்; தற்காலிக சலுகை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
11:09 am

செய்தி முன்னோட்டம்

இலங்கையின் மின்னணு பயண அங்கீகார அமைப்பில் தற்காலிக பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்திய பயணிகள் முன்கூட்டியே அனுமதி பெறாமல் இலங்கைக்கு பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் நோக்கில் மறு அறிவிப்பு வரும் வரை இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் மஹிஷினி கொலொன்னே தெரிவித்துள்ளார். பராமரிப்புப் பணிகளால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர் பயணிகளின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Embed

சுற்றுலா ஊக்குவிப்புப் பிரச்சாரம்

இந்தியா உள்ளிட்ட ஆறு முக்கிய நாடுகளில் இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்புப் பிரச்சாரம்

குளிர்கால சுற்றுலா பயணிகளின் வருகையை இரட்டிப்பாக்கி 4.2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் இலக்குடன் ஆறு நாடுகளில் சுற்றுலா பிரச்சாரத்தை இலங்கை முன்னெடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகளாவிய சுற்றுலா பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் டிஜிட்டல் விளம்பரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட பத்தாண்டு கால தாமதத்திற்குப் பிறகு இலங்கையின் அழகிய கடற்கரைகள், பழமையான கோயில்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல இந்தத் திட்டம் உதவும் என சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ரோஷன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இலங்கையின் சுற்றுலா வருவாய்

வளைகுடா நெருக்கடியைத் தாண்டி மீண்டு வரும் இலங்கையின் சுற்றுலா வருவாய்

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கையின் மூன்றாவது பெரிய அந்நியச் செலாவணி ஈட்டும் துறையாக சுற்றுலாத் துறை விளங்குகிறது.

வளைகுடா நெருக்கடி காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பயணிகள் வருகை 20 சதவீதம் குறைந்தபோதிலும் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 13 லட்சம் பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் மூலம் ஜூலை மாத இறுதிக்குள் 1.5 பில்லியன் டாலர் சுற்றுலா வருவாய் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு 3.2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய நிலையில் இந்த ஆண்டு 27 லட்சம் பயணிகள் வருகை மூலம் 4.2 பில்லியன் டாலர் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எரிபொருள் விலை உயர்வு

எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் அந்நியச் செலாவணி கையிருப்பை உயர்த்தும் முயற்சி

தனது அனைத்து எரிபொருள் தேவைகளையும் இறக்குமதி செய்யும் இலங்கை ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்கு பிறகு எரிபொருள் விலை முப்பத்தைந்து சதவீதம் உயர்ந்ததால் எரிபொருள் பங்கீடு மற்றும் புதன்கிழமைகளில் பொது விடுமுறை அறிவிக்கும் சூழல் ஏற்பட்டது.

கடந்த மாத இறுதியில் 6.6 பில்லியன் டாலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்த சுற்றுலா டாலர்கள் மிகவும் அவசியமாக உள்ளன.

மேலும் இலங்கை ரூபாயின் மீதான அழுத்தத்தைக் குறைக்க அந்நாட்டு மத்திய வங்கி கடந்த மே மாதம் அடிப்படை வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT