விஜயின் 'ஜனநாயகன்' ஆடியோ லான்ச் மலேசியாவில் என உறுதி செய்த தயாரிப்பு குழு?
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'ஜன நாயகன்'-இன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது என பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி விரைவில் மலேசியாவில் ஆடியோ லான்ச் இருக்கக்கூடும். இந்த பதிவில் இன்று மாலை இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூகங்கள் அடிப்படையில் டிசம்பர் 27, 2025 அன்று இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Selamat datang 😁
— KVN Productions (@KvnProductions) November 21, 2025
Watch this space at 5:30 PM today ✌🏻#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/j8SyLZY8xi
விவரங்கள்
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்ப்பு
இந்த நிகழ்வு, நடிகர் விஜய்யின் கடைசி இசை வெளியீட்டு விழா பேச்சாக இருக்கலாம் என்று ஊகங்கள் நிலவுவதுதான் இந்த இசை வெளியீட்டு விழாவினை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. அதனால், டிசம்பர் 27 அன்று மலேசியாவில் அவர் ஆற்றும் உரையை காண அவருடைய ரசிகர்களும், அரசியல் பார்வையாளர்களும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக அவர் கரூர் சம்பவத்திற்கு பின்னர் இன்னும் பொதுவெளிக்கு வராத காரணத்தால் இந்த பேச்சு அரசியல் பேச்சாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் படத்தை இயக்கி இருப்பது எச். வினோத், இசையமைத்திருப்பது அனிருத் ரவிச்சந்தர். விஜய் படங்களுக்கான இவரது பாடல்கள் எப்போதும் ஹிட் அடிப்பதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.