LOADING...
'ஜன நாயகன்' இரண்டாவது பாடல்: டிசம்பர் 18 அன்று வெளியாகிறது
'ஜன நாயகன்' ஆடியோ வெளியீடு டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது

'ஜன நாயகன்' இரண்டாவது பாடல்: டிசம்பர் 18 அன்று வெளியாகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Dec 16, 2025
05:57 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 9ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகும். இதன் ஆடியோ வெளியீடு டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியிருந்த முதல் பாடல் ஏற்கனவே ஹிட் ஆன நிலையில் இரண்டாவது பாடல் என்ன வகையாக இருக்குமென ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, நரேன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement