பொங்கல் ரேஸின் கிங் விஜய்! வசூலைக் குவித்த தளபதியின் பொங்கல் ரிலீஸ் படங்களின் முழு பட்டியல்
செய்தி முன்னோட்டம்
தளபதி விஜயின் 69வது படமான ஜனநாயகன், எச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இது விஜயின் கடைசிப் படம் எனக் கருதப்படுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் அவற்றின் வெற்றி விவரங்களை இதில் பார்க்கலாம். கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996): விஜயின் ஆரம்பகால பொங்கல் வெளியீடுகளில் இதுவும் ஒன்று. இது ஒரு சுமாரான வெற்றியைப் பெற்றது. காலமெல்லாம் காத்திருப்பேன் (1997): இத்திரைப்படம் ஒரு சராசரி வெற்றியைப் பெற்றது. கண்ணுக்குள் நிலவு (2000): விஜயின் 25வது படமான இது, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டாலும், வசூல் ரீதியாக மிதமான வரவேற்பையே பெற்றது.
பிரண்ட்ஸ்
காலங்கள் கடந்தும் பேசப்படும் பிரண்ட்ஸ்
பிரண்ட்ஸ் (2001): சூர்யாவுடன் இணைந்து நடித்த இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. நகைச்சுவைக்காக இன்றும் இந்தப் படம் பேசப்படுகிறது. வசீகரா (2003): இந்தப் படம் வசூல் ரீதியாகச் சற்று பின்னடைவைச் சந்தித்தது. திருப்பாச்சி (2005): பொங்கல் ரேசில் விஜய்யை ஒரு மாபெரும் ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திய படம். இது பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. ஆதி (2006): அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. போக்கிரி (2007): விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். பொங்கல் அன்று வெளியாகி வசூல் சாதனைகளைப் படைத்த மாபெரும் பிளாக்பஸ்டர். வில்லு (2009): இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது.
காவலன்
சிக்கல்களை கடந்து வந்த காவலன்
காவலன் (2011): பல சிக்கல்களுக்குப் பிறகு வெளியான இந்தப் படம் விஜய்க்கு ஒரு நல்ல வெற்றியைக் கொடுத்தது. நண்பன் (2012): இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியைப் பெற்றது. ஜில்லா (2014): மோகன்லாலுடன் இணைந்து நடித்த இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டியது. பைரவா (2017): கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக இந்தப் படம் லாபகரமான ஒன்றாக அமைந்தது. மாஸ்டர் (2021): கொரோனா பாதிப்புக்குப் பிறகு தியேட்டர்களுக்குப் புத்துயிர் ஊட்டிய படம். பொங்கலுக்கு வெளியாகி மெகா ஹிட் ஆனது. வாரிசு (2023): குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், ₹300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
சாதனைகள்
விஜயின் பொங்கல் சாதனைகள்
விஜய் நடித்த படங்கள் பொங்கல் சமயத்தில் வெளியாவது ரசிகர்களுக்குப் பெரும் திருவிழாவாக அமைகிறது. குறிப்பாக, போக்கிரி, திருப்பாச்சி, மாஸ்டர் மற்றும் வாரிசு போன்ற படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கி பெரும் வசூல் சாதனை படைத்துள்ளன. இந்நிலையில், விஜயின் கடைசி படமான ஜனநாயகன் முந்தைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகளை முறியடித்து, மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.