LOADING...
வெளியீட்டிற்கு முன் சிக்கல்களை சந்தித்த விஜய்யின் படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர்; 'ஜன நாயகன்' அதை பின்பற்றுமா?
'ஜன நாயகன்', வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகி வருகிறது

வெளியீட்டிற்கு முன் சிக்கல்களை சந்தித்த விஜய்யின் படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர்; 'ஜன நாயகன்' அதை பின்பற்றுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2026
12:28 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்பு நடிக்கும் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகி வருகிறது. ஆனால், வெளியீட்டிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் நேற்று வரை தாமதம் ஏற்பட்டது. இதனை பலரும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கருதுகின்றனர். எனினும், விஜய்யின் பல படங்கள் வெளியீட்டிற்கு முன்னர் சிக்கல்களை சந்தித்துள்ளன. அவை விஜய்க்கு புதிதல்ல என்கின்றனர் அவரின் ரசிகர்கள். சுவாரசியமாக அவ்வாறு சர்ச்சையை சந்தித்த அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 'ஜன நாயகன்' திரைப்படமும் அந்த வகையில் வெற்றி பெறும் என ஆருடம் கூறுகின்றனர். கடைசி நிமிட சிக்கல்களை சந்தித்த விஜய் படங்கள்:

சிக்கல்கள்

ஜன நாயகன் சந்தித்த சிக்கல் என்ன?

கடந்த டிசம்பர் 19-ஆம் தேதியே தணிக்கை குழுவினர் படத்தைப் பார்த்துள்ளனர். படத்தில் உள்ள அரசியல் வசனங்கள் மற்றும் சில காட்சிகளுக்குக் குழுவினர் 10-க்கும் மேற்பட்ட மாற்றங்களை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. படக்குழுவினர் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பித்த பின்னரும், அதிகாரப்பூர்வ சான்றிதழ் நேற்று மாலை வரை வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் முன்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தின் நீளம் 3 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் அரசியலில் முழுவீச்சில் இறங்க உள்ள நிலையில், இப்படத்தில் உள்ள அரசியல் கூர்மை மிக்க வசனங்களே தணிக்கை தாமதத்திற்கு முக்கியக் காரணம் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

வரலாறு

விஜய்யின் முந்தைய படங்களும் சவால்களை சந்தித்த வரலாறு 

விஜய்யின் பெரும்பாலான படங்கள் நெருக்கடிக்கு மத்தியிலேயே வெளியாகியுள்ளன: காவலன் & தலைவா: அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. மெர்சல் & சர்க்கார்: ஜிஎஸ்டி மற்றும் இலவசத் திட்டங்கள் குறித்த வசனங்களுக்காகவும், ஓட்டுரிமை பற்றி பேசியதால் பெரும் அரசியல் எதிர்ப்புகளை சந்தித்தன. 'சர்க்கார்' படத்தில் சில சமரசங்கள் செய்த பின்னரே வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. லியோ: அதிகாலை காட்சிகள் மற்றும் டிக்கெட் விலை உயர்வுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதே வரிசையில் 'ஜன நாயகனும்' எவ்வளவு தடைகள் வந்தாலும், இப்படம் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement