LOADING...
காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் அணிக்கு சிக்கல்; அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்; காரணம் இதுதான்
சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் தள பக்கம் முடக்கம்

காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் அணிக்கு சிக்கல்; அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்; காரணம் இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 13, 2026
11:46 am

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்டிரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கிய சில மணிநேரங்களிலேயே அந்த அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இந்திய உரிமையாளர்களைக் கொண்ட ஒரு அணி பாகிஸ்தான் வீரரை வாங்கியது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

பின்னணி

சர்ச்சையின் பின்னணி

சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை சுமார் ₹2.34 கோடிக்கு (190,000 பவுண்டுகள்) வாங்கியது. இதன் மூலம் இந்திய உரிமையாளரைக் கொண்ட ஒரு வெளிநாட்டு லீக் அணியில் இடம் பிடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெயரை அப்ரார் பெற்றார். இந்தியா vs பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் அந்த நிர்வாகத்தைப் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். எக்ஸ் தளத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் புறக்கணிக்க வேண்டும் (#BoycottSRH) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

முடக்கம்

எக்ஸ் தளம் முடக்கம்

ஏலம் முடிந்த சில மணிநேரங்களில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. "விதிமுறைகளை மீறியதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என்ற செய்தி மட்டுமே காட்டப்படுகிறது. இதற்கான தெளிவான காரணத்தை எக்ஸ் நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை.

Advertisement

மாற்றங்கள்

ஏலத்தின் பிற முக்கிய மாற்றங்கள்

அப்ரார் அகமதுவைத் தவிர, உஸ்மான் தாரிக் என்ற மற்றொரு பாகிஸ்தான் வீரரை பர்மிங்காம் பீனிக்ஸ் அணி வாங்கியது. ஆனால், அந்த அணிக்கு ஐபிஎல் தொடர்பு இல்லை. ஷாஹீன் அப்ரிடி ஏலத்திலிருந்து விலகினார், ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரகுமானை பர்மிங்காம் பீனிக்ஸ் அணி சுமார் ₹1.23 கோடிக்கு வாங்கியது. சசெக்ஸ் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் கோல்ஸ் என்பவரை லண்டன் ஸ்பிரிட் அணி சுமார் ₹4.8 கோடிக்கு வாங்கியது. இதுவே அன்றைய நாளின் அதிகபட்ச தொகையாகும். இந்த விவகாரம் ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement