சிறு குழந்தைகளுக்கான ஏஐ பொம்மைகள் குறித்து கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என நிபுணர்கள் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஆனால், இவை குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என 'காமன் சென்ஸ் மீடியா' மற்றும் 'ஃபேர்பிளே' போன்ற அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆய்வின் போது, சில ஏஐ பொம்மைகள் குழந்தைகளுக்குப் பொருத்தமற்ற ஆலோசனைகளை வழங்கியது கண்டறியப்பட்டது. உதாரணமாக, கத்தி அல்லது தீப்பெட்டியை எங்கே கண்டுபிடிப்பது என்று கூறுவது போன்ற குழந்தைகளுக்கு ஏற்றதாக இல்லாத பதில்களைக் கொடுத்துள்ளது.
ஏஐ
எப்படி பாதிக்கும்?
இந்த செயற்கை நுண்ணறிவு பொம்மைகள் தங்களை ஒரு 'நண்பனாக' முன்னிறுத்திக் கொள்கின்றன. இதனால் குழந்தைகள் உண்மையான மனித உறவுகளை விட இந்த இயந்திரங்கள் மீது அதிக அன்பு செலுத்தத் தொடங்குகின்றனர். இது பிற்காலத்தில் சமூகத்துடன் பழகுவதில் சிக்கல்களை உருவாக்கும் என என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பொம்மைகள் குழந்தைகளின் குரல் மற்றும் செயல்பாடுகளைத் தொடர்ந்து பதிவு செய்கின்றன. இந்தத் தரவுகள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்கப்படலாம் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது. பாரம்பரிய பொம்மைகளுடன் விளையாடும்போது குழந்தைகள் தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏஐ பொம்மைகளே எல்லாவற்றையும் முடிவு செய்வதால், குழந்தைகளின் சுயமான சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகள்
ஏஐ பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்:
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும். 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். ஏஐ பொம்மைகளுக்குக் கடுமையான அரசு விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் எனப் பல நாட்டு செனட்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். "குழந்தைகளுக்குத் தேவை ரோபோக்கள் அல்ல, உண்மையான மனித உறவுகளே" என்பதே நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.