LOADING...
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர்

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

எழுதியவர் Prasanna
Mar 14, 2026
01:48 pm

செய்தி முன்னோட்டம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டரான ஹீரோ டெஸ்டினி 125 (Hero Destini 125) வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். இந்த ஸ்கூட்டரின் மிகப்பெரிய பலம் அதன் எரிபொருள் சிக்கனம். இது லிட்டருக்கு சுமார் 59-60 கி.மீ மைலேஜ் தரும் என ஹீரோ நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள 'i3S' தொழில்நுட்பம், சிக்னல்களில் ஸ்கூட்டர் நின்றிருக்கும்போது இன்ஜினைத் தானாகவே அணைத்து, ஆக்சிலரேட்டரைத் திருப்பியவுடன் மீண்டும் ஸ்டார்ட் செய்யும். இது எரிபொருள் விரயத்தைக் குறைக்க உதவுகிறது. குடும்பத்துடன் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், இதன் இருக்கை மிகவும் நீளமாகவும், அகலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்மையான சஸ்பென்ஷன் அமைப்பு இருப்பதால், குண்டும் குழியுமான சாலைகளிலும் பயணம் மிகவும் சொகுசாக இருக்கும்.

ஹீரோ

டெஸ்டினி 125 அம்சங்கள்:

டாப்-எண்ட் மாடல்களில் புளூடூத் கனெக்டிவிட்டி வசதி உள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைலை இணைத்து, டிஜிட்டல் திரையில் 'டர்ன்-பை-டர்ன்' நேவிகேஷன், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்டுகளைப் பெறலாம். மேலும், இதில் செக்மென்ட்டிலேயே முதல்முறையாக 'ஆட்டோ-கேன்சல் இண்டிகேட்டர்' வசதி உள்ளது (திருப்பத்தை முடித்தவுடன் இண்டிகேட்டர் தானாகவே அணைந்துவிடும்). இதன் ஒரு முக்கியக் குறைபாடு என்னவென்றால், இதன் சீட்டுக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் இடம் வெறும் 19 லிட்டர் மட்டுமே. ஹோண்டா ஆக்டிவா அல்லது டிவிஎஸ் ஜூபிடர் போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இது குறைவு. டெஸ்டினி 125-ன் முன்பகுதி மற்றும் பக்கவாட்டுப் பேனல்கள் மெட்டல் (Metal Body) மூலம் செய்யப்பட்டுள்ளன. இது ஸ்கூட்டருக்கு ஒரு உறுதியான தன்மையையும், ப்ரீமியம் தோற்றத்தையும் தருகிறது.

Advertisement