LOADING...
$7.3 மில்லியன் பாக்கி! 2028 ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பையில் டிரம்ப் பங்கேற்கத் தடை? முழு விவரம்
2028 ஒலிம்பிக் மற்றும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியில் டிரம்ப் பங்கேற்க தடை விதிக்க திட்டம்

$7.3 மில்லியன் பாக்கி! 2028 ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பையில் டிரம்ப் பங்கேற்கத் தடை? முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
05:33 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம் என்று உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (WADA) ஆலோசித்து வருகிறது. அமெரிக்க அரசு செலுத்த வேண்டிய சுமார் $7.3 மில்லியன் (சுமார் ₹60 கோடி) நிலுவைத் தொகையை வழங்காததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

பின்னணி

நிலுவைத் தொகை விவகாரம்

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசு 'வாடா' அமைப்புக்கு வழங்க வேண்டிய வருடாந்திர சந்தா தொகையைச் செலுத்தவில்லை. தற்போது வரை சுமார் $7.3 மில்லியன் பாக்கி உள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள 'WADA' செயற்குழு கூட்டத்தில், நிலுவைத் தொகை செலுத்தாத நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்கும் புதிய விதிமுறை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மோதல்

நீண்டகால மோதலின் பின்னணி

அமெரிக்காவிற்கும் 'WADA' அமைப்புக்கும் இடையிலான இந்த மோதல் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. 2024இல் 23 சீன நீச்சல் வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியபோது, அவர்களை 'WADA' அமைப்பு விடுவித்தது அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 2014 சோச்சி ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பிருந்தே 'WADA'வின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதற்குப் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இரு நிர்வாகங்களும் நிதி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளன.

Advertisement

சாத்தியக்கூறுகள்

நடைமுறைச் சாத்தியம் என்ன?

அமெரிக்க மண்ணிலேயே நடைபெறும் போட்டிகளுக்கு, அமெரிக்க அதிபருக்கே தடை விதிப்பது என்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய முன்னாள் 'WADA' அதிகாரி ராகுல் குப்தா, "சுமார் $50 மில்லியன் பட்ஜெட் கொண்ட ஒரு சுவிஸ் அறக்கட்டளை, அமெரிக்க அதிபர் எங்கு செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியாது. இது முற்றிலும் கேலிக்குரியது." என்று விமர்சித்துள்ளார். 'WADA' செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறுகையில், ஒருவேளை இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டாலும், அது பழைய பாக்கிகளுக்குப் பொருந்தாது என்பதால் இந்த ஆண்டு உலகக் கோப்பையைப் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஃபிஃபா ஆகியவை இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

Advertisement