LOADING...
கவாஸாகி நின்ஜா 650 பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக் இப்போது சலுகை விலையில் விற்பனை
கவாஸாகி நின்ஜா 650

கவாஸாகி நின்ஜா 650 பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக் இப்போது சலுகை விலையில் விற்பனை

எழுதியவர் Prasanna
Mar 13, 2026
01:00 pm

செய்தி முன்னோட்டம்

ப்ரீமியம் பைக் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கவாசாகி (Kawasaki) நிறுவனம், தனது பிரபலமான நிஞ்சா 650 (Ninja 650) மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்தியாவில் நடுத்தர எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் நிஞ்சா 650 ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது இந்த மாடலுக்கு கவாசாகி நிறுவனம் ரூ. 22,000 வரை 'குட் டைம்ஸ் வவுச்சர்' (Good Times Voucher) என்ற பெயரில் தள்ளுபடி வழங்குகிறது. இந்தச் சலுகை இந்த மார்ச் மாதம் மட்டுமோ அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி

விலை மற்றும் சிறப்பம்சங்கள்:

இந்த 650 சிசி ஸ்போர்ட் பைக்கானது ரூ.7.91 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் நிலையில், தள்ளுபடியுடன் சேர்த்து ரூ.7.69 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இந்த பைக்கில் 649cc, பேரலல் ட்வின், லிக்விட்-கூல்டு இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 bhp பவரையும் 64 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இதில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் கூடிய டிஎஃப்டி (TFT) டிஸ்ப்ளே போன்ற நவீன வசதிகள் உள்ளன.

Advertisement