LOADING...
கூகுள் மேப்ஸ் சேவையிலும் ஏஐ வசதி, ஜெமினியை இன்டகிரேட் செய்த கூகுள்
கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் சேவையிலும் ஏஐ வசதி, ஜெமினியை இன்டகிரேட் செய்த கூகுள்

எழுதியவர் Prasanna
Mar 12, 2026
07:22 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் 'ஆஸ்க் மேப்ஸ்' எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மேப்ஸ் செயலி வெறும் வழிகாட்டியாக மட்டுமில்லாமல், பயனர்களுடன் உரையாடும் ஒரு ஏஐ உதவியாளராக மாறியுள்ளது. பயனர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களைப் பற்றி சாதாரண மொழியில் கேள்விகள் கேட்கலாம். உதாரணமாக, "அருகில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட கஃபே எங்குள்ளது?" அல்லது "குறைவான கூட்ட நெரிசல் கொண்ட உணவகங்கள் எவை?" என்று கேட்டால், ஜெமினி மூலம் துல்லியமான பதில்களை கூகுள் மேப்ஸே வழங்கும்.

கூகுள்

எப்படியெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம்?

விடுமுறை நாட்களுக்கான முழுமையான பயணத் திட்டத்தை வகுத்துத் தரும்படி பயனர்கள் கேட்கலாம். இதில் 30 கோடிக்கும் அதிகமான இடங்கள் மற்றும் 50 கோடிக்கும் மேலான பயனர்களின் மதிப்புரைகள் அடிப்படையில் பரிந்துரைகள் வழங்கப்படும். முப்பரிமாண காட்சிகளுடன் கூடிய புதிய வழிகாட்டுதல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்குச் சாலைகளின் அமைப்பு மற்றும் கட்டிடங்களை நிஜமாகப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும். ஏஐ தொழில்நுட்பம் 'ஹாலுசினேட்' (தவறான தகவல்களை உருவாக்குதல்) செய்வதைத் தவிர்க்க வலுவான பாதுகாப்பு வழிமுறைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 'ஆஸ்க் மேப்ஸ்' வசதி முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் இது கணினிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Advertisement