LOADING...
LPG, CNG, PNG, LNG.. இந்தியாவின் இந்த பிரதான எரிவாயுக்கள் எதற்குப் பயன்படுக்கின்றன?
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பிரதான எரிவாயுக்கள்

LPG, CNG, PNG, LNG.. இந்தியாவின் இந்த பிரதான எரிவாயுக்கள் எதற்குப் பயன்படுக்கின்றன?

எழுதியவர் Prasanna
Mar 12, 2026
03:29 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தியை இறக்குமதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து வகையான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய எரிவாயுக்களான எல்பிஜி (LPG), எல்என்ஜி (LNG), பிஎன்ஜி (PNG) மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவை இருக்கின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை இந்தியா பெரிதும் நம்பியிருப்பதால், இந்தப் போர்ச் சூழல் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

எரிவாயு

எரிவாயுக்களின் வகைகள் மற்றும் பயன்பாடு

LPG (Liquefied Petroleum Gas): இது பிரதான சமையல் எரிவாயுவாக வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது கிடைக்கும் இது, அதிக அழுத்தத்தில் திரவமாக்கப்பட்டு சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. LNG (Liquefied Natural Gas): இது மீத்தேனை -162°C வெப்பநிலையில் திரவமாக்கிய வடிவமாகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதுடன், கப்பல்கள் மூலமாக வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு இது முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்தியா

CNG மற்றும் PNG

CNG (Compressed Natural Gas): இது வாகனங்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக, குறைவான காற்று மாசை ஏற்படுத்தும் சிக்கனமான தேர்வாக இது பார்க்கப்படுகிறது. PNG (Piped Natural Gas): இது குழாய்கள் மூலம் நேரடியாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவாகும். சிலிண்டர்களைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத வசதியை இது வழங்குகிறது.

Advertisement

இறக்குமதி

இறக்குமதி பாதிப்பு

இந்த எரிவாயுக்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலான தேவையை இந்தியா இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் பெரும்பாலான சரக்குக் கப்பல்கள் வருவதால், போர் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டால் எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது. இந்திய அரசு தற்போது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தனது கையிருப்பை அதிகரிப்பதோடு, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய சாமானிய மக்களின் சமையலறை மற்றும் போக்குவரத்துச் செலவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தத் துறை தற்போது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

Advertisement