Loading...
சர்தார் 2 மிரட்டல் டீசர் வெளியீடு! எஸ்.ஜே.சூர்யாவின் வேற லெவல் சம்பவம்

சர்தார் 2 மிரட்டல் டீசர் வெளியீடு! எஸ்.ஜே.சூர்யாவின் வேற லெவல் சம்பவம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2026
10:17 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 2022இல் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான சர்தார் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த உளவுத்துறை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மீண்டும் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 1 நிமிடம் 53 வினாடிகள் கொண்ட இந்த டீசர், முதல் பாகத்தை விட மிகப்பிரம்மாண்டமான சர்வதேச ஸ்பை மிஷனாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா

நல்ல வில்லனா? கெட்ட ஹீரோவா?

இந்த டீசரில் பிரதான வில்லனாக பிளாக் டாகர் (Black Dagger) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, வழக்கம்போல தனது அசாத்திய நடிப்பால் ஒட்டுமொத்த டீசரையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

டீசரின் இறுதியில், "தொழில்நுட்ப ரீதியா பார்த்தா நான் தான் நல்லவன், அவனுங்க தான் கெட்டவனுங்க... இந்த சண்டையில யாரு ஜெயிக்கப் போறா? நல்ல வில்லனா இல்லை கெட்ட ஹீரோக்களா?" என அவர் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள்

நட்சத்திர பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு

இப்படத்தில் கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவி எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்குச் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சர்வதேச அளவில் கம்போடியா, சீனா போன்ற இடங்களில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கார்த்தியின் திரைப்பயணத்திலேயே மிக அதிக பட்ஜெட்டில் உருவான படமாகும்.

ADVERTISEMENT

செப்டம்பர் 10

செப்டம்பர் 10இல் திரையரங்குகளில் ரிலீஸ்

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த டீசர், யூடியூப் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வைகளைக் கடந்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சர்தார் 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

செப்டம்பர் 11 அன்று விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ரணபலி படம் வெளியாகவுள்ள நிலையில், சர்தார் 2 பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT