'முதலில் தடுத்தார்கள், இப்போது உலக நாடுகளிடம் கெஞ்சுகிறார்கள்!' அமெரிக்காவை விளாசிய ஈரான் அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு காலத்தில் ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டாம் என்று இந்தியாவை வற்புறுத்திய அமெரிக்கா, தற்போது அதே எண்ணெயை வாங்குமாறு உலக நாடுகளிடம் கெஞ்சுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
இரட்டை வேடம்
அமெரிக்காவின் இரட்டை வேடம்
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அரக்சி, "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவை அச்சுறுத்த அமெரிக்கா பல மாதங்களைச் செலவிட்டது. ஆனால், ஈரானுடன் போர் தொடங்கி இரண்டு வாரங்களே ஆன நிலையில், உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, இந்தியாவையும் மற்ற நாடுகளையும் ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு வெள்ளை மாளிகை இப்போது கெஞ்சி வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளார். கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ள சூழலில், சந்தையை நிலைப்படுத்த அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The U.S. spent months on bullying India into ending oil imports from Russia. After two weeks of war with Iran, White House is now begging the world—incl India—to buy Russian crude.
— Seyed Abbas Araghchi (@araghchi) March 13, 2026
Europe thought backing illegal war on Iran would win U.S. support against Russia.
Pathetic. pic.twitter.com/fbkrXpXa9P
தளர்வு
30 நாள் தளர்வு மற்றும் பின்னணி
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் குறைக்க, ஏற்கனவே கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் சரக்குகளை வாங்குவதற்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் 30 நாள் கால அவகாசம் அளித்துள்ளது. மார்ச் 12 ஆம் தேதிக்கு முன்னதாக கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய ஏப்ரல் 11 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமான ஒரு நடவடிக்கை மட்டுமே என்று அமெரிக்க நிதித்துறை செயலர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.