LOADING...
70% கச்சா எண்ணெயை மாற்றுப் பாதையில் கொண்டு வரும் இந்தியா
மாற்றுப் பாதை வழியாக இந்தியா வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்

70% கச்சா எண்ணெயை மாற்றுப் பாதையில் கொண்டு வரும் இந்தியா

எழுதியவர் Prasanna
Mar 12, 2026
08:50 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலகிலேயே மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதையான 'ஹார்முஸ் நீரினை' (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 70 சதவீதத்தை மாற்றுப்பாதைகள் வழியாகக் கொண்டு வரத் தொடங்கியுள்ளது. முன்னதாக ஹார்முஸ் நீரினை அல்லாத பிற பாதைகள் வழியாக 55 சதவீத எண்ணெய் மட்டுமே வந்த நிலையில், தற்போது அது 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்யா

ரஷ்யாவிடம் உயர்ந்த கொள்முதல்

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஏற்படும் விநியோகத் தடையைச் சமாளிக்க, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா வழங்கிய 30 நாள் தற்காலிக விலக்கு மூலம், சுமார் 30 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய் இந்தியாவுக்கு வரவுள்ளது. தற்போது வளைகுடா பகுதியில் உள்ள 28 இந்தியக் கப்பல்களை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியைத் தொடர்ந்து வருகின்றன.

Advertisement