Loading...
"முஜ்தபா காமேனிக்கு தீவிர சிகிச்சை!" உயிருக்குப் போராடுவதாக தகவல்; ஈரான் அதிபர் அளித்த அதிர்ச்சி அறிக்கை
ஈரான் உச்ச தலைவர் முஜ்தபா காமேனி மருத்துவமனையில் அனுமதி என தகவல்

"முஜ்தபா காமேனிக்கு தீவிர சிகிச்சை!" உயிருக்குப் போராடுவதாக தகவல்; ஈரான் அதிபர் அளித்த அதிர்ச்சி அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2026
08:01 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்ற முஜ்தபா காமேனியின் உடல்நிலை மிக மோசமடைந்து கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும், அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானில் உள்ள நம்பகமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் நாளிதழும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அவரது மரணம் அல்லது 'தியாகம்' பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தாரா?

மக்கள் பார்வைக்கு வராத பின்னணி

கடந்த 2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் முஜ்தபா காமேனியின் தந்தை அலி காமேனி கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற முஜ்தபா, இதுவரை எந்தவொரு நேரலை அல்லது பொது நிகழ்வுகளிலும் நேரில் தோன்றவில்லை.

தாக்குதலின் போது அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதுகாப்பான ரகசிய இடத்தில் தங்கியிருந்தபடி எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாகவே அவர் நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தி வந்துள்ளார்.

சந்தேகம்

ஈரான் அதிபரின் ஒப்புதலும் தொடரும் வெளிநாட்டு சந்தேகங்களும்

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சமீபத்தில் அரசுத் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், உச்ச தலைவர் முஜ்தபா காமேனியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாகத் தெரிவித்தது இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம் சவூதி ஊடகமான அல்-ஹதாத், காமேனி ஈரானிலேயே இல்லை என்றும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர் முழுமையாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

இருப்பினும் ஈரான் அரசு அதிகாரிகள் காமேனியின் காயம் சிறியதுதான் என்றும், அவர் தொடர்ச்சியாகப் போரிடும் ராணுவத்தை வழிநடத்துவதாகவும் கூறி வழக்கம் போல மறுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT