LOADING...
சிலிண்டர் புக் பண்ண போறீங்களா? கிராமப்புறங்களுக்கு இனி 45 நாட்கள் இடைவெளி; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்

சிலிண்டர் புக் பண்ண போறீங்களா? கிராமப்புறங்களுக்கு இனி 45 நாட்கள் இடைவெளி; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 13, 2026
02:00 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி தேவையைச் சீரமைக்க, சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார். தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விநியோகத்தைச் சீராக மேலாண்மை செய்யவும் கீழ்க்கண்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி கிராமப்புறங்களில் ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 45 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் (இதற்கு முன் 25 நாட்களாக இருந்தது). நகர்ப்புறங்களில் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு

பீதி காரணமாக முன்பதிவு

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று உறுதி அளித்த அமைச்சர், "மக்கள் அச்சம் காரணமாக அதிகளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்" என்று குறிப்பிட்டார். கடந்த 5 நாட்களில் எல்பிஜி உற்பத்தி 28 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அறிவிப்புகள்

முக்கிய அறிவிப்புகள்

சிலிண்டர் முன்பதிவு செய்ததில் இருந்து விநியோகம் செய்யப்படுவதற்கான கால அளவு (சராசரியாக 2.5 நாட்கள்) மாறவில்லை. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குத் தடையில்லா எல்பிஜி விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க, டெலிவரி ஆதென்டிகேஷன் கோட் முறை இனி 90% வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயமாக்கப்படும். வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாதத் தேவையில் 20% விநியோகிக்கப்படும். எல்பிஜி மீதான அழுத்தத்தைக் குறைக்க, ரேஷன் கடைகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement