AI சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பர்சனல் கம்யூட்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள பெர்ப்ளெக்ஸிட்டி
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) தேடுபொறி சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள பெர்ப்ளெக்சிட்டி நிறுவனம், 'பர்சனல் கம்ப்யூட்டர்' எனும் புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாதாரண சாட்பாட்களைப் போல பதில்களைத் தருவதோடு நின்றுவிடாமல், உங்கள் கணினியில் உள்ள கோப்புகள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்தி சுயமாக வேலைகளைச் செய்யும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மேக் மினி போன்ற கணினிகளில் 24/7 தொடர்ந்து இயங்கக்கூடியது. நீங்கள் உறங்கும் நேரத்திலும் இது உங்களுக்காக இணையத்தில் தேடுதல் நடத்துவது, மின்னஞ்சல்களைக் கையாளுவது போன்ற பணிகளைச் செய்யும்.
ஏஐ
எப்படி செயல்படுகிறது?
இந்தத் தளம் ஒரே ஒரு ஏஐ மாடலை மட்டும் நம்பியிருக்காமல், கிளாட், ஜெமினி, மற்றும் சாட்ஜிபிடி போன்ற பல முன்னணி ஏஐ மாடல்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு பணிக்கும் ஏற்ற சிறந்த மாடலைப் பயன்படுத்துகிறது. உங்கள் கணினியில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தினாலும், முக்கியமான செயல்களைச் செய்வதற்கு முன்பு பயனரின் அனுமதியைக் கேட்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் அவசர காலங்களில் உடனடியாக நிறுத்த 'கில் ஸ்விட்ச்' வசதியும் உள்ளது. தற்போது இந்த வசதி குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டும் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது ஏஐ தொழில்நுட்பத்தை வெறும் தகவல் தேடலில் இருந்து, சுயமாக வேலை செய்யும் 'டிஜிட்டல் ஊழியர்' நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.