LOADING...
ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து 4 பேர் பலி; ஈரான் தாக்கியதால் நடந்ததா?
ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து 4 பேர் பலி

ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து 4 பேர் பலி; ஈரான் தாக்கியதால் நடந்ததா?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 13, 2026
04:21 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு ஈராக் பகுதியில் அமெரிக்க விமானப் படையின் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 வீரர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

விவரங்கள்

விபத்து குறித்த விவரங்கள்

விமானத்தில் பயணித்த 6 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 2 வீரர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது எதிரிகளின் தாக்குதலால் நடந்த விபத்து அல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஈரான் இதை நேரடியாக தாக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள், தாங்கள் தான் ஏவுகணை மூலம் இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளன. ஆனால், அமெரிக்கா இந்தக் கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளது.

இழப்புகள்

அமெரிக்காவுக்குத் தொடரும் இழப்புகள்

பிப்ரவரி 28 இல் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா இழக்கும் 4வது ராணுவ விமானம் இதுவாகும். இதற்கு முன்பு, மார்ச் 2 ஆம் தேதி குவைத்தில் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவை குவைத் நாட்டு விமானப்படை தவறுதலாக நடத்திய தாக்குதலில் நடந்தாக அந்நாடு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

முக்கியத்துவம்

KC-135 விமானத்தின் முக்கியத்துவம்

1950களில் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த KC-135 விமானங்கள், போர்க்களத்தில் மற்ற போர் விமானங்களுக்கு நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் மிக முக்கியமான பணியைச் செய்கின்றன. நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்த இந்த விமானங்கள் அமெரிக்க ராணுவத்திற்கு முதுகெலும்பாக உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதாலும், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த விபத்து அமெரிக்க ராணுவத்திற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement