இரண்டாம் பாகத்தின் வெளியீட்டை ஒட்டி துரந்தர் முதல் பாகத்தையும் மறுவெளியீடு செய்யும் தயாரிப்பு நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பாலிவுட் திரைப்படமான 'துரந்தர்' முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. மார்ச் 13 முதல் இந்த முதல் பாகத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் மீண்டும் கண்டு ரசிக்கலாம். உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுது. இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.1,000 கோடி வசூலுடன், சர்வதேச அளவில் ரூ.1,300 கோடி வசூல் செய்தது இந்தத் திரைப்படம்.
பாலிவுட்
இரண்டாம் பாகம் வெளியீடு
இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம், மார்ச் 19 அன்று வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தை மீண்டும் திரையரங்குகளுக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 250 திரைகளிலும், வெளிநாடுகளில் 250 திரைகளிலும் சேர்த்து மொத்தமாக 500 திரைகளில் இந்தத் திரைப்படத்தை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இரண்டாம் பாகமானது 'துரந்தர்: தி ரிவெஞ்சு' என்ற பெயரில் திரைக்கு வரவிருக்கிறது. இரண்டு திரைப்படங்கும், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் வெளியாகவுள்ளன.