இனி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வேகமாக இயங்கும், கூகுள் வழங்கும் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மையப்பகுதியான 'கெர்னல்' (Kernel) செயல்திறனை மேம்படுத்த 'ஆட்டோ எஃப்டிஓ' (Automatic Feedback-Directed Optimization) எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இ து ஸ்மார்ட்போன்களின் வேகத்தை அதிகரிப்பதோடு, பேட்டரி ஆயுளையும் மேம்படுத்த உதவும். பொதுவாக ஒரு மென்பொருள் உருவாக்கப்படும்போது, அது எப்படிச் செயல்படும் என்பது குறித்த பொதுவான அனுமானங்களின் அடிப்படையிலேயே அதன் குறியீடுகள் (Code) தொகுக்கப்படுகின்றன. ஆனால், ஆட்டோ எஃப்டிஓ தொழில்நுட்பம் பயனர்களின் உண்மையான பயன்பாட்டுத் தரவை அடிப்படையாகக் கொள்கிறது.
கூகுள்
கூகுள் சோதனை
கூகுள் தனது ஆய்வகத்தில் மிகவும் பிரபலமான 100 செயலிகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தியது. இதன் மூலம், போனின் சிபியூ எந்தெந்தப் பணிகளுக்கு அதிக நேரத்தைச் செலவிடுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளை மட்டும் சிறப்பாகச் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கிறது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் ரீஸ்டார்ட் செய்யும்போது ஆகும் நேரம் (Boot time) சுமார் 2% குறையும். செயலிகளைத் முதன்முறையாகத் திறப்பது (Cold app launch) 4.3% வரை வேகமாக இருக்கும். தேவையற்ற சிபியூ பணிகளைக் குறைப்பதன் மூலம் மின் நுகர்வு குறைந்து, பேட்டரி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது (Multitasking) போன் ஹேங் ஆகாமல் சீராக இயங்கும்.