ஐபிஎல் 2026: ஜிம்பாப்வே புயல் பிளெஸ்ஸிங் முசரபானியை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்காக ஜிம்பாப்வே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிளெஸ்ஸிங் முசரபானியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒப்பந்தம் செய்துள்ளது. தனது வேகத்தாலும், பந்துகளை எகிறச் செய்யும் திறனாலும் எதிரணி பேட்டர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கேகேஆர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முசரபானி சர்வதேச டி20 போட்டிகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். இதுவரை 80க்கும் மேற்பட்ட சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 90க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தும் திறன் கொண்ட இவர், 3/8 என்ற சிறந்த பந்துவீச்சு புள்ளிவிபரத்தையும் கொண்டுள்ளார். இவரது வருகை கேகேஆர் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A new Blessing in Purple & Gold 💜🔥 pic.twitter.com/p31V3LsGfm
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2026