ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹560 சரிவு; இன்றைய விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை (மார்ச் 13) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 குறைந்து ₹14,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 குறைந்து ₹1,19,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹75 குறைந்து ₹16,256 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹600 குறைந்து ₹130,048 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹150 குறைந்து ₹12,550 ஆகவும், ஒரு சவரன் ₹1,200 குறைந்து ₹1,00,400 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி, வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹290.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.