LOADING...
அமெரிக்காவின் தாக்குதலும் இந்தியாவின் உதவியும்! IRIS Dena விவகாரத்தில் எழுந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானியத் தூதர்
IRIS Dena விவகாரத்தில் எழுந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானியத் தூதர்

அமெரிக்காவின் தாக்குதலும் இந்தியாவின் உதவியும்! IRIS Dena விவகாரத்தில் எழுந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானியத் தூதர்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
06:24 pm

செய்தி முன்னோட்டம்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தியா இதற்கு அளித்த ஒத்துழைப்பு குறித்து ஈரானியத் தூதர் முகமது ஃபதாலி தற்போது விளக்கம் அளித்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' நிகழ்வில் பேசிய தூதர் முகமது ஃபதாலி, "இந்த விவகாரத்தில் இந்திய அரசு எங்களுக்கு உண்மையிலேயே உதவியது. எங்களது கோரிக்கையை ஏற்று அவர்கள் ஒத்துழைப்பு நல்கினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேறு சில நாடுகள் ஒத்துழைக்க மறுத்துவிட்டன." என்று தெரிவித்தார். இதன் மூலம், இந்தத் தாக்குதல் நடந்ததால் எழுந்த தார்மீக விவாதங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அடைக்கலம்

IRIS Lavan கப்பலுக்கு அடைக்கலம்

மார்ச் 4 ஆம் தேதி 'IRIS Dena' தாக்கப்பட்ட அதே வேளையில், ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான 'IRIS Lavan' கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்தது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அந்தக் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது. தற்போது அந்தக் கப்பலில் இருந்த அத்தியாவசியமற்ற 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை இந்தியா பாதுகாப்பாகத் தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. மீதமுள்ள கடற்படை வீரர்கள் கப்பலைப் பராமரிப்பதற்காகக் கொச்சியிலேயே தங்கியுள்ளனர்.

எச்சரிக்கை

ஈரானின் எச்சரிக்கை

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று தூதர் ஃபதாலி எச்சரித்துள்ளார். "ஈரான் எந்த ஒரு செயலையும் பதிலடி கொடுக்காமல் விடாது. ஏற்கனவே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இன்னும் சில நாட்களில் நல்ல செய்தியைக் கேட்பீர்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

Advertisement

பின்னணி

விவாதத்தின் பின்னணி

விசாகப்பட்டினம் கடற்படைப் பயிற்சிக்கு வந்திருந்த கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டதால், இந்தியாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் இது எப்படி நிகழ்ந்தது என்ற கேள்வி எழுந்தது. முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் கன்வால் சிபல் உள்ளிட்டோர் இது இந்தியாவின் தார்மீகப் பொறுப்பு எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், "கப்பல் நமது எல்லைப் பகுதியைத் தாண்டிய பிறகு அதற்குப் பாதுகாப்பு அளிப்பது நமது கடமையல்ல, ஈரான் போரில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் பாதுகாப்பான இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும்," என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தூதர் முகமது ஃபதாலியின் தற்போதைய கருத்து, இந்தியா தனது தரப்பிலிருந்து செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் முறையாகச் செய்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement