LOADING...
வெறும் ரூ.50,000-த்திற்கு இந்த டிவிஎஸ் ஆர்பிட்டர் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்
டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1

வெறும் ரூ.50,000-த்திற்கு இந்த டிவிஎஸ் ஆர்பிட்டர் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்

எழுதியவர் Prasanna
Mar 12, 2026
03:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய 'ஆர்பிட்டர் வி1' (Orbiter V1) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் மின்சார வாகனத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், இதன் ஆரம்ப விலை வெறும் ரூ.50,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலைக்கு முக்கியக் காரணம், 'BaaS' (Battery as a Service) திட்டத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதே. இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பேட்டரிக்கான முழுத் தொகையையும் ஆரம்பத்தில் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, பேட்டரியை சந்தா முறையில் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். இது வாகனத்தின் ஆரம்ப விலையை கணிசமாகக் குறைக்கிறது.

டிவிஎஸ்

முக்கிய அம்சங்கள்:

ஆர்பிட்டர் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 86 கி.மீ வரை ரேஞ்சு தரும் எனத் தெரிவித்துள்ளது டிவிஎஸ். இது நகர்ப்புறப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது. நவீன வடிவமைப்பு, எல்இடி விளக்குகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். ஏற்கனவே சந்தையில் உள்ள ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X) மற்றும் ஏத்தர் ரிஸ்டா போன்ற மாடல்களுக்கு இந்த புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1 ஒரு பலத்த போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. குறைந்த விலையில் தரமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

Advertisement