பங்குச்சந்தை கடும் சரிவு ஒரே நாளில் ரூ.9.5 லட்சம் கோடி காலி
செய்தி முன்னோட்டம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் அதிர்வுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று (மார்ச் 13) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் உலகளாவிய சந்தைகளை உலுக்கி வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தையில் இன்று கடும் விற்பனை அழுத்தம் நிலவியது. ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சுமார் 9.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு துடைத்தெறியப்பட்டது.
பங்குச்சந்தை
இன்றைய சந்தை நிலவரம்:
சென்செக்ஸ் (Sensex): வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 74,563.92 என்ற அளவில் நிலைபெற்றது. நிஃப்டி (Nifty): சுமார் 488 புள்ளிகள் (2.06%) வீழ்ச்சியடைந்து 23,151.10 என்ற நிலைக்குக் கீழ் இறங்கியது. ஜூன் 2022-க்குப் பிறகு இந்தியப் பங்குச்சந்தை சந்தித்த மிக மோசமான வாரமாக இது பதிவாகியுள்ளது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் சுமார் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளன.