அப்பாச்சி 160 4V பைக்கின் எந்த வேரியன்டை வாங்குவது? விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
அப்பாச்சி RTR 160 4V பைக் மாடலை எட்டு வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். ரூ.1.16 லட்சம் முதல் ரூ.1.37 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிறைய வேரியன்ட்கள் இருப்பதனால் எந்த வேரியன்டைத் தேர்ந்தெடுப்பது என்று வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படலாம். உங்களது தேவைக்கும், பட்ஜெட்டுக்கும் எந்த வேரியன்ட் ஏற்றதாக இருக்கும் என்பதனைப் பார்க்கலாம். முதலில் என்னென்ன வேரியன்ட்களாக இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது என்பதைப் பார்த்து விடலாம். இந்த பைக்கை, டிரம், RM டிஸ்க், டிஸ்க், BT டிஸ்க், ஸ்பெஷல் எடிஷன், டூயல் சேனல் ABS, USD-யுடன் கூடிய டூயல் சேனல் ABS மற்றும் TFT என எட்டு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்படுகிறது.
டிவிஎஸ்
வேரியன்ட்களுக்கு இடையிலான வித்தியாசம்
ஒவ்வொரு வேரியன்டின் பெயரில் குறிப்பிட்டிருக்கும் அம்சமே அந்த பைக்கின் முக்கிய மாற்றமாக அல்லது முக்கிய அம்சமாக இருக்கும். அடிப்படையான வேரியன்டில் டிரம் பிரேக்கே கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு மேலே டிஸ்க் பிரேக் கொண்ட வேரியன்ட்கள், BT என்பது ப்ளூடூத்தைக் குறிக்கும். டூயல் சேனல் ABS வேரியன்ட்களில் பெயருக்கு ஏற்ற வகையில் அந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கும். USD என்பது அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷன் செட்டப்பைக் குறிக்கிறது. இது கோல்டன் நிறத்தில் கொடுக்கப்படும். TFT வேரியன்டில் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கும். மற்ற வேரியன்ட்களில் LCD டிஸ்பிளே தான். இந்த வசதிகள் மாற்றங்களைத் தவிர்த்து வேரியன்ட்களுக்கிடையில் மெக்கானிக்கலாகவோ டிசைனிலோ வேறு எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.