ஹோஸ்டிங் தேவையில்லை, பிரவுசரிலேயே வெப்சைட் உருவாக்கலாம்!
செய்தி முன்னோட்டம்
வேர்ட்பிரஸ் நிறுவனம் 'மை வேர்ட்பிரஸ்' (my.WordPress.net) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் எவ்வித தொழில்நுட்ப அறிவும் இல்லாமல், இணைய உலாவியிலேயே நேரடியாக இணையதளங்களை உருவாக்க முடியும். பொதுவாக ஒரு இணையதளத்தைத் தொடங்க ஹோஸ்டிங் (Hosting) வாங்க வேண்டும், டொமைன் (Domain) பதிய வேண்டும். ஆனால், இந்தத் தளத்தில் நுழைந்த உடனே ஒரு முழுமையான வேர்ட்பிரஸ் தளம் உங்களுக்குத் தயாராக இருக்கும். இதற்குப் பயனர் கணக்கு கூடத் தேவையில்லை.
இணையதளம்
தனிப்பட்ட இணையதளம்:
இதில் உருவாக்கப்படும் தளங்கள் பொது இணையத்தில் தெரியாது. இது உங்கள் பிரவுசரின் உள்ளேயே இயங்கும். எனவே, உங்கள் குறிப்புகள், ஆராய்ச்சிகள் அல்லது சோதனை முயற்சிகளை ரகசியமாகச் செய்ய இது ஒரு சிறந்த இடமாகும். யாருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்: வேர்ட்பிரஸ் கற்க விரும்பும் மாணவர்கள். புதிய தீம்கள் மற்றும் பிளகின்களைச் சோதித்துப் பார்க்க விரும்பும் டெவலப்பர்கள். தனது எண்ணங்களை ரகசியமாகப் பதிவு செய்ய நினைக்கும் எழுத்தாளர்கள். இந்தத் தளத்தில் உள்ள தரவுகள் உங்கள் பிரவுசரின் கேச்சியை கிளியர் செய்தால் (Clear Cache) அழிந்துவிடும். எனவே, முக்கியமான வேலைகளைச் செய்யும்போது அதனை 'பேக்-அப்' எடுத்துக்கொள்வது அவசியமாகும்.