Loading...
10 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானுக்குச் செல்லும் மாலத்தீவு அதிபர்; புது டெல்லியை அச்சுறுத்தும் பின்னணி என்ன?
10 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானுக்கு செல்லும் மாலத்தீவு அதிபர்

10 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானுக்குச் செல்லும் மாலத்தீவு அதிபர்; புது டெல்லியை அச்சுறுத்தும் பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
05:44 pm

செய்தி முன்னோட்டம்

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு அக்டோபர் 20 முதல் 22 வரை மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில் மாலத்தீவு அதிபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளின் 60-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

பாகிஸ்தான் பயணத்தின் முக்கிய அம்சங்கள்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் முய்ஸு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, சுற்றுலா, மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார்.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் - மாலத்தீவு வர்த்தக மன்றம் நடத்தப்பட்டு புதிய முதலீட்டு வாய்ப்புகள் ஆராயப்படவுள்ளன.

பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா

இந்தியாவுக்கு இது ஏன் ஒரு கவலைக்குரிய விஷயம்?

அதிபர் முய்ஸுவின் இந்த பயணம் புது டெல்லியின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுகள் அடிபடுவது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

முய்ஸு தரப்பிலிருந்து 'சார்க்' செயல்முறையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுவது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தற்போதைய அரசியல் சூழலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாலத்தீவின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த இந்தியா ரூ. 3,000 கோடி மதிப்பிலான நாணய மாற்று வசதியை அண்மையில் நீட்டித்து உதவியுள்ள சூழலில்,முய்ஸுவின் இந்த பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு இராஜதந்திர வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

ADVERTISEMENT