மாலத்தீவு: செய்தி

08 Jun 2024

இந்தியா

இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபரை பிரமாண்டமாக வரவேற்கத் திட்டமிடும் இந்தியா 

நாளை நடைபெற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள தெற்காசிய தலைவர்கள் அனைவருக்கும் புது டெல்லியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

03 Jun 2024

இந்தியா

'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல் 

அழகிய கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற மாலத்தீவுகள், காசாவில் நடந்துவரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாலத்தீவு நாட்டிற்குள் இஸ்ரேலிய பிரஜைகள் நுழைவதைத் தடைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தீவு நாடு அறிவித்தது.

13 May 2024

இந்தியா

'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர் 

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் உத்தரவின் பேரில் 76 இந்திய பாதுகாப்பு வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற்றப்பட்டனர். அது நடந்து சில நாட்களே ஆகும் நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு இராணுவத்திடம் இன்னும் இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்புக்கொண்டுள்ளார்.

08 May 2024

இந்தியா

நாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் 

மாலத்தீவின் சீன-சார்பு அதிபர் முகமது முய்சு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு உயர்மட்ட தலைவர் நாளை இந்தியா வர உள்ளார். மாலத்தீவின் வெளியுறவு மந்திரி மூசா ஜமீர் மே 9 அன்று இந்தியா வருகிறார்.

22 Apr 2024

தேர்தல்

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் முகமது முய்சுவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை

மாலத்தீவின் சீன ஆதரவு அதிபர் முகமது முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

19 Apr 2024

இந்தியா

இருநாட்டு பிரச்சனையால் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி 

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 34,847 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

18 Apr 2024

உலகம்

மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் 

2018 ஆம் ஆண்டு முதல் அதிபர் முகமது முய்சுவின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

08 Apr 2024

உலகம்

இந்திய தேசியக்கொடியை அவமதித்ததற்கு மன்னிப்பு கோரினார் மாலத்தீவு அரசியல்வாதி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து இழிவாக பேசிய மாலத்தீவு அரசியல்வாதியான மரியம் ஷியுனா, தற்போது இந்திய தேசியக்கொடியை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

28 Mar 2024

இந்தியா

துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளியிட முடியாது: மாலத்தீவுகள்

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மாற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், துருப்புக்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக மாலே மற்றும் புதுடெல்லி இடையேயான ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட மாட்டோம் என்று மாலத்தீவின் அரசாங்கம் கூறியதாக மாலத்தீவு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

18 Mar 2024

இந்தியா

மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும் 

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் சேமிக்கப்படும் என்று மார்ச் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவுகளின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

09 Mar 2024

இந்தியா

'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர் 

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மாலத்தீவை புறக்கணிக்க இந்திய மக்கள் அழைப்பு விடுத்தது மற்றும் அது தனது நாட்டின் சுற்றுலாத் துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கவலை தெரிவித்துள்ளார்.

05 Mar 2024

உலகம்

'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி 

இலவச இராணுவ உதவியை மாலத்தீவுக்கு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.

05 Mar 2024

சீனா

மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், "வலுவான" இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக இலவச இராணுவ உதவியை மாலத்தீவுகு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.

26 Feb 2024

இந்தியா

இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் 

ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார்.

22 Feb 2024

சீனா

இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல்

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான பதற்றம் நிலவி வரும் இந்த நேரத்தில், ஒரு சீனக் ஆராய்ச்சி கப்பல், மாலத்தீவின் கடற்பகுதியில் நுழைந்து, அதன் தலைநகரான மாலேயில் நிறுத்தப்பட உள்ளது.

05 Feb 2024

இந்தியா

'இந்தியப் படைகள் மே மாதத்திற்குள் மாலத்தீவை விட்டு வெளியேறும்': மாலத்தீவு அதிபர்

இன்று நடைபெற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையின் போது அவர், "எங்கள் இறையாண்மையில் தலையிடவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ எந்த நாட்டையும் நம் நாடு அனுமதிக்காது" என்று கூறினார்.

05 Feb 2024

இந்தியா

நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு 

மாலத்தீவின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இன்று நடைபெறும் அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

இந்தியா உதவியை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் மாலத்தீவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி

பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வார்-உல் ஹக் கக்கருக்கும், மாலத்தீவு ஜனாதிபதி முஹம்மத் முய்ஸூவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, 'திவாலான' பாகிஸ்தான் அரசு, மாலத்தீவின் அவசர வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

31 Jan 2024

சீனா

மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து

இன்று காலை, மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி உள்ளனர்.

'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் (ஜேபி) தலைவர் காசிம் இப்ராஹிம், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதாக மாலத்தீவு டிஜிட்டல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

30 Jan 2024

இந்தியா

மாலத்தீவை புறக்கணிக்கும் இந்தியர்கள்: மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா

கடந்த மூன்று வாரங்களாக மாலத்தீவு சுற்றுலாப் பயணிகளின் புள்ளிவிவரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவா?

மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), முஹம்மது முய்ஸு அரசாங்கத்திற்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையைத் தொடங்குவதற்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடங்குவதற்குத் தேவையான போதுமான கையெழுத்துக்களை சேகரித்துள்ளது.

23 Jan 2024

சீனா

மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு

சீன ஆராய்ச்சி கப்பலான சியான் யாங் ஹாங் 03, அடுத்த மாத தொடக்கத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலேயில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

21 Jan 2024

இந்தியா

இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி 

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு ஒரு சிறுவனின் விமானப் பயணத்திற்கு இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்து, மாலத்தீவில் ஒரு 14 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான், என்று மாலத்தீவு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ள்ன.

17 Jan 2024

இந்தியா

மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்?

மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை திரும்பப்பெறுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு கேட்டு கொண்டுள்ளது.

மாலத்தீவு : உலகநாடுகளில் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக எப்படி மாறியது?

இந்தியாவிற்கும், மாலத்தீவிற்கும் இடையேயான சர்ச்சை நடக்கும் இந்த நேரத்தில், உலகமக்கள் பலரையும் மாலத்தீவு ஈர்த்து எப்படி? சுற்றுலாவாசிகளின் சொர்கபுரியாக மாறியது எப்படி என்பது குறித்து ஒரு அலசல்.

லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல்

கடந்த ஒரு வாரமாக, இந்தியா-மாலத்தீவிற்கு இடையேயான ராஜதந்திர விவகாரங்கள் பிளவுபட்டுள்ளது.

10 Jan 2024

இந்தியா

மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, இந்திய ஆன்லைன் ட்ராவல் நிறுவனமான EaseMyTrip, சில நாட்களுக்கு முன் மாலத்தீவுக்கு செல்லும் அனைத்து விமானங்களின் முன்பதிவுகளையும் நிறுத்தியது.

10 Jan 2024

சீனா

இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.

'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

மாலத்தீவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் "குறுகிய பார்வையை" காட்டுகிறது என்றும், இந்தியா நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது என்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி கூறியுள்ளார்.

08 Jan 2024

இந்தியா

பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு அதிகம் பேர் அந்த இயற்கை எழில் கொஞ்சும் தீவை சுற்றுலாவுக்காக தேட தொடங்கியுள்ளனர் என்று மேக்மைட்ரிப் தெரிவித்துள்ளது.

08 Jan 2024

இந்தியா

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் 

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.