பட்ஜெட் 2025: வெளிநாடுகளுக்கு ரூ.5,806 கோடி உதவித் தொகை; முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அவரது பட்ஜெட் உரையில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவின் வெளிநாட்டு உதவி தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றன.
இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளிநாட்டு நாடுகளுக்கு மொத்தம் ரூ.5,483 கோடியை ஒதுக்கியுள்ளது.
இது கடந்த ஆண்டில் ரூ.5,806 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது முக்கியமாக அண்டை மற்றும் மூலோபாய நாடுகளுக்கான ஒதுக்கீடுகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
வெளி நாடுகளுக்கு இந்தியாவின் உதவி அதன் 'அண்டை நாடுகளுக்கு முதலில்' முன்னுரிமை அளித்துள்ளது.
அதன்படி 60 சதவீதத்திற்கும் அதிகமான நிதி இந்தியாவின் உடனடி அண்டை நாடுகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு
மாலத்தீவிற்கான நிதி அதிகரிப்பு
இந்தியாவிடமிருந்து வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் பூட்டான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது, அந்த நாட்டிற்கு ரூ.2,100 கோடிக்கு மேல் கொடுக்கப்பட உள்ளது.
இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட சற்று அதிகரித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள் இடையே சமீபத்தில் சந்திப்புகள் நடைபெற்ற போதிலும், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக அந்த நாட்டுக்கான உதவி குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவுடன் மாலத்தீவு அதிபர் மோதல் போக்கை கடைபிடித்த நிலையில், மாலத்தீவுக்கான இந்தியாவின் உதவி ரூ.400 கோடியில் இருந்து ரூ.600 கோடியாக உயர்ந்துள்ளதால், மாலத்தீவும் ஒரு பெரிய பயனாளியாக உருவெடுத்துள்ளது.
மாலத்தீவு சமீபத்தில் இந்தியாவுடனான உறவுகளை சரிசெய்ய முயற்சிக்கும் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.