துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளியிட முடியாது: மாலத்தீவுகள்
செய்தி முன்னோட்டம்
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மாற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், துருப்புக்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக மாலே மற்றும் புதுடெல்லி இடையேயான ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட மாட்டோம் என்று மாலத்தீவின் அரசாங்கம் கூறியதாக மாலத்தீவு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மாலத்தீவின் முஹம்மது முய்ஸு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், மார்ச் 12ஆம் தேதி, 25 வீரர்களைக் கொண்ட தனது முதல் ராணுவ குழுவை இந்தியா திரும்பப் பெறத் தொடங்கியது.
இரண்டாவது குழு ஏப்ரல் 10ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவின் ஊடகமான Mihaaru News உடன் பேசிய மாலத்தீவு வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என கூறியுள்ளார்.
மாலத்தீவு
இந்தியாவின் தயவு தேவை இல்லை என முய்ஸு அரசு கூறியது
சீன சார்புத் தலைவராகக் கருதப்படும் முய்ஸு, மே 10க்குப் பிறகு இந்திய ராணுவ வீரர்கள் எவரும், சிவில் உடையில் இருப்பவர்களும் கூட தனது நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று உறுதிபடுத்தினார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சிக்கு வந்த முய்ஸு, மாலத்தீவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க, மாலத்தீவு "வெளிநாட்டு இராணுவப் பிரசன்னம்" இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதாக உறுதியளித்தார்.
இதையடுத்து, இந்த ஆண்டு ஜனவரியில், இந்தியா படைகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது .
முய்ஸு அதிபராக பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது