இருநாட்டு பிரச்சனையால் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 34,847 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மிக குறைவாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் 56,208 இந்தியப் பயணிகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாலத்தீவுக்கு 36,053 இந்தியப் பயணிகள் சென்றுள்ளனர் 2019 உடன் ஒப்பிடும் போது மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் குறைந்துள்ளது. 2021 முதல் 2023 வரை கோவிட்-19க்கு பிற்கு மாலத்தீவின் சுற்றுலா வருமானத்திற்கு முதல் இருந்த இந்தியா, இந்த ஆண்டு வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது.
மாலத்தீவை புறக்கணிக்கும் இந்தியர்கள்
மாலத்தீவை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் பிரதமர் மோடியை இழிவாக பேசியதை அடுத்து, மாலத்தீவை புறக்கணிப்போம் என்ற வாசகம் இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியது. பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார். இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் சில மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசி இருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நாட்டவர்களின் எண்ணிகையில் ரஷ்யா முதலிடத்திலும், இத்தாலி 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் உள்ளன.