
இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி
செய்தி முன்னோட்டம்
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு ஒரு சிறுவனின் விமானப் பயணத்திற்கு இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்து, மாலத்தீவில் ஒரு 14 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான், என்று மாலத்தீவு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ள்ன.
மூளைக் கட்டி மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் பெற்றோர், காஃப் அலிஃப் வில்லிங்கிலியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து மாலத்தீவு தலைநகரான மாலேவுக்கு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றைக் கோரி இருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு தேவையான அவசர உதவியை அரசாங்கம் உடனடியாக வழங்கவில்லை என்று அந்த சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிஜ்வ்க்கே
"அவசர நிகழ்வுகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் வைத்திருப்பதே தீர்வு"
"பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே அவனை மாலேக்கு அழைத்துச் செல்ல நாங்கள் ஐலண்ட் ஏவியேஷனை அழைத்தோம், ஆனால் அவர்கள் எங்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. அவர்கள் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு தொலைபேசியில் பதிலளித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் வைத்திருப்பதே தீர்வு" என்று உயிரிழந்த சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
அவசரமாக வெளியேற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குப் பிறகு தான் அந்த சிறுவன் மாலேக்கு அழைத்து செல்லப்பட்டான்.
இதற்கிடையில், அவசரகால வெளியேற்ற கோரிக்கையைப் பெற்ற ஆசந்தா கம்பெனி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"கோரிக்கையை பெற்ற உடனேயே வெளியேறுவதற்கான செயல்முறையைத் தொடங்கிவிட்டோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டபடி விமானத்தை அனுப்ப முடியவில்லை." என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.