நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு
மாலத்தீவின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இன்று நடைபெறும் அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. அதிபரின் 'இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை' கண்டித்து இந்த முடிவை அந்த கட்சிகள் எடுத்துள்ளன. சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் அதிபர் முய்ஸு, 2023 நவம்பரில் இந்தியாவுக்கு ஆதரவான இப்ராஹிம் முகமது சோலியை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு, இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையேயான உறவுகள் சேதமடைந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, இரு நாட்டுக்கும் இடையேயான உறவுகள் சிதைந்தன.
மாலத்தீவு அரசாங்கத்தின் இந்தியாவுக்கு எதிரான போக்கு
பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார். இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் சில மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசி இருந்தனர். அதனை தொடர்ந்து, மாலத்தீவில் உதவிக்காக நிறுத்தப்பட்டிருத்த இந்திய படையினரை வெளியேற்ற கோரி இந்தியாவிடம் கேட்டு கொண்டது. ஆனால், சீனா உளவு கப்பல்களை தங்களது வர மாலத்தீவு சமீபத்தில் அனுமதிருந்தது. அதனால், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட மாலத்தீவின் தற்போதைய அதிபரின் நாடாளுமன்ற உரையை புறக்கணிக்க சில கட்சிகள் முடிவு செய்துள்ளன.