இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல்
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான பதற்றம் நிலவி வரும் இந்த நேரத்தில், ஒரு சீனக் ஆராய்ச்சி கப்பல், மாலத்தீவின் கடற்பகுதியில் நுழைந்து, அதன் தலைநகரான மாலேயில் நிறுத்தப்பட உள்ளது. 4,300 டன் எடையுள்ள Xiang Yang Hong 03 என பெயர் கொண்ட அந்த கப்பல், இந்தியப் பெருங்கடலின் தரையை மேப்பிங் செய்யும் 'ஆராய்ச்சி' கப்பலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடலுக்கு அடியில் மேப்பிங் செய்வதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று இந்திய கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ந்து இந்தியாவின் கவலையை அதிகரிக்கும் சீனா
இந்த கப்பல் சீனாவில் உள்ள மூன்றாவது கடல்சார் ஆய்வு நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் நோக்கம், கடற்பரப்பு மேப்பிங் மற்றும் கனிம ஆய்வு போன்றவை ஆகும். இந்த கப்பல் ஒரு மாதத்திற்கு முன்பு சீனாவின் சன்யாவில் இருந்து புறப்பட்டது. விரைவில் மாலேயில் கப்பல்துறைக்கு வர வாய்ப்புள்ளது. முன்னதாக, சீனக் கப்பல் மாலத்தீவின் கடற்பகுதியில் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது. ஆனால் "சுழற்சி மற்றும் நிரப்புதலுக்காக" மட்டுமே வரும் என்று மாலத்தீவு அரசு கடந்த மாதம் கூறியது. எவ்வாறாயினும், இந்தியாவின் கவலைகள் மாலத்தீவுகளின் கடல் மட்டத்தில் மட்டும் இல்லை. இந்த கப்பல் இயங்கும் மற்ற பகுதிகளுக்கும் அவை விரிவடைகின்றன. இந்த கப்பல் மாலதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் ஜிக்ஜாக் முறையில் இயங்கி வருகிறது.