Page Loader
பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு

பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு

எழுதியவர் Sindhuja SM
Jan 08, 2024
05:31 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு அதிகம் பேர் அந்த இயற்கை எழில் கொஞ்சும் தீவை சுற்றுலாவுக்காக தேட தொடங்கியுள்ளனர் என்று மேக்மைட்ரிப் தெரிவித்துள்ளது. மேக்மைட்ரிப் தளத்தில் மட்டும் லட்சத்தீவுக்கான தேடல் 3,400% அதிகரித்துள்ளது என்று ஆன்லைன் டிராவல் நிறுவனமான மேக்மைட்ரிப் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார். இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் சில மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசி இருந்தனர். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிவாழ்க்ண

மாலத்தீவை புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் இணையவாசிகள் 

மாலத்தீவு அரசாங்கம், இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர்கள் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்று மறுத்துள்ளது. இதற்கிடையில், இணையவாசிகள் பலர் மாலத்தீவு அதிகாரிகளின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலர் "மாலத்தீவை புறக்கணிக்க" அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், இந்திய ஆன்லைன் ட்ராவல் நிறுவனமான EaseMyTrip, நேற்று மாலத்தீவுக்கு செல்லும் அனைத்து விமானங்களின் முன்பதிவுகளையும் நிறுத்தியதாக அறிவித்தது. இது குறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த EaseMyTrip நிறுவனர் நிஷாந்த் பிட்டி, "நமது தேசத்துக்கு ஆதரவாக நிற்கும்" நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.