Page Loader
மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா

மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா

எழுதியவர் Sindhuja SM
Mar 05, 2024
11:37 am

செய்தி முன்னோட்டம்

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், "வலுவான" இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக இலவச இராணுவ உதவியை மாலத்தீவுகு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாட, மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கசான் மௌமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான அலுவலகத்தின் பிரதி இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுனை சந்தித்தார். மௌமூன் மற்றும் மேஜர் ஜெனரல் பாகுன் "மாலத்தீவு குடியரசிற்கு சீனாவின் இராணுவ உதவியை இலவசமாக வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, வலுவான இருதரப்பு உறவுகளை காட்டுகிறது" என்று மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

உலகம்

மாலத்தீவுக்கு ஆம்புலன்ஸ்களை பரிசாக வழங்கிய சீனா 

ஆனால், இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விவரங்கள் வழங்கப்படவில்லை. இதற்கிடையில், மாலத்தீவுக்கு 12 சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆம்புலன்ஸ்களை சீனா பரிசாக வழங்கியுள்ளது என்ற செய்திகளும் வெளியாகி உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற விழாவில், மாலத்தீவிற்கான சீனத் தூதர் வாங் லிக்சின், மாலத்தீவுக்கு ஆம்புலன்ஸ்களை பரிசாக அளித்த கடிதத்தை வழங்கினார். வெளிநாட்டு இராணுவங்களை மாலத்தீவில் இருந்து வெளியேற்ற போவதாக கூறி மாலத்தீவில் இருக்கும் இந்திய இராணுவத்தை வெளியேற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்தியாவுக்கு சமீபத்தில் காலக்கெடு விதித்திருந்தார். எனவே, மாலத்தீவு-இந்திய உறவுகள் கடுமையாக சிதைந்துள்ள நிலையில், அந்நாடு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது பெரிதாக பார்க்கப்டுகிறது.