இந்தியா உதவியை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் மாலத்தீவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி
பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வார்-உல் ஹக் கக்கருக்கும், மாலத்தீவு ஜனாதிபதி முஹம்மத் முய்ஸூவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, 'திவாலான' பாகிஸ்தான் அரசு, மாலத்தீவின் அவசர வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவு தனது வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்ய அண்டை நாடுகளை நம்பி உள்ளது. மாலத்தீவு ஜனாதிபதி முஹம்மத் முய்ஸுவுடன் தொலைபேசி உரையாடலின் போது, பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வார்-உல் ஹக் கக்கர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாக மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் அதே வேளையில், ஜனாதிபதி முய்சுவும் பெய்ஜிங்கிற்கு ஆதரவானவராகக் கருதப்படுகிறார்.