LOADING...
இந்திய தேசியக்கொடியை அவமதித்ததற்கு மன்னிப்பு கோரினார் மாலத்தீவு அரசியல்வாதி

இந்திய தேசியக்கொடியை அவமதித்ததற்கு மன்னிப்பு கோரினார் மாலத்தீவு அரசியல்வாதி

எழுதியவர் Sindhuja SM
Apr 08, 2024
02:47 pm

செய்தி முன்னோட்டம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து இழிவாக பேசிய மாலத்தீவு அரசியல்வாதியான மரியம் ஷியுனா, தற்போது இந்திய தேசியக்கொடியை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய தேசியக்கொடியை அவமதித்ததற்கு மாலத்தீவு அரசியல்வாதியான மரியம் ஷியுனா இன்று மன்னிப்பு கோரியுள்ளார். சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கிய ஷியுனா, இந்தியாவையோ அல்லது அந்நாட்டின் தேசியக் கொடியையோ அவமதிப்பது தனது நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

 மாலத்தீவு 

"நான் உண்மையாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்"

"எனது சமீபத்திய இடுகையால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் நான் உண்மையாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் பயன்படுத்திய படம் இந்தியக் கொடியை ஒத்திருப்பது என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எதிர்காலத்தில், இது போன்ற கவனக்குறைவுகளைத் தடுக்க, நான் பகிரும் உள்ளடக்கத்தை சரிபார்ப்பதில் மிகவும் விழிப்புடன் இருப்பேன். " என்று மரியம் ஷியுனா கூறியுள்ளார். "மாலத்தீவுகள் இந்தியாவுடனான தனது உறவையும் பரஸ்பர மரியாதையையும் ஆழமாக மதிக்கிறது" என்று அதிபர் முகமது முய்ஸுவின் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த(PNC) முன்னாள் துணை அமைச்சர் கூறியுள்ளார்.