Page Loader
மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து
மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம் மற்றும் முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலி pc: இந்தியா டுடே

மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து

எழுதியவர் Venkatalakshmi V
Jan 31, 2024
12:12 pm

செய்தி முன்னோட்டம்

இன்று காலை, மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி உள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷமீம், மாலத்தீவில் முந்தைய MDP ஆட்சியில், அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. MDP கட்சி, ஆளும் முய்ஸு அரசின் 'இந்திய எதிர்ப்பு' கொள்கையை வன்மையாக கண்டித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது மாலத்தீவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மாலத்தீவில் தற்போது அதிபராக முகமது முய்ஸு வெளிப்படையாக சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து