மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவா?
செய்தி முன்னோட்டம்
மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), முஹம்மது முய்ஸு அரசாங்கத்திற்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையைத் தொடங்குவதற்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடங்குவதற்குத் தேவையான போதுமான கையெழுத்துக்களை சேகரித்துள்ளது.
சீனாவுக்கு ஆதரவான முய்ஸுக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலத்தீவு நாடாளுமன்றத்தில் முய்ஸுவின் அமைச்சரவை அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில் ஏற்பட்ட அமளிதுமளிக்கு அடுத்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று, மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) மற்றும் மாலத்தீவுகளின் முற்போக்கு கட்சி (பிபிஎம்) அடங்கிய ஆளும் கூட்டணியின் எம்.பி.க்கள் எம்.டி.பி. கட்சியினருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
எம்.பி.க்கள் சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் கூடி சண்டையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ட்விட்டர் அஞ்சல்
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் அமளிதுமளி
*Viewer discretion advised*
— Adhadhu (@AdhadhuMV) January 28, 2024
Parliament proceedings have been disrupted after clashes between PPM/PNC MPs and opposition MPs. pic.twitter.com/vhvfCBgQ1s