பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை
செய்தி முன்னோட்டம்
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாலத்தீவு நாட்டிற்குள் இஸ்ரேலிய பிரஜைகள் நுழைவதைத் தடைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தீவு நாடு அறிவித்தது.
இது குறித்து மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில், பாலஸ்தீனத் தேவைகளை மதிப்பிடுவதற்காக ஒரு சிறப்புத் தூதரையும் நியமித்தது மாலத்தீவு அரசாங்கம்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலை முகமையின் உதவியுடன் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு உதவ நிதி திரட்டும் பிரச்சாரத்தை அமைப்பதாக மேலும் அறிவித்தது.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரேலியர்கள் நுழைய தடை
Maldives announces ban on entry of individuals holding Israeli passports
— ANI Digital (@ani_digital) June 2, 2024
Read @ANI Story | https://t.co/oXdMh5B6KP#Maldives #Israel #passport pic.twitter.com/6bbJWonOhH
தடை
இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதிக்க முடிவெடுத்த அதிபர்
பாலஸ்தீன குடிமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் "பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையுடன் மாலத்தீவுகள்" என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய பேரணியை நடத்தவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த முடிவை அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹுசன் முறைப்படி அறிவித்தார்.
முன்னதாக, மாலத்தீவுகள் ரஃபாவில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தன.
"பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய திட்டமிட்ட ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை முற்றிலும் மீறுவதாகும்" என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 35 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.