
லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஒரு வாரமாக, இந்தியா-மாலத்தீவிற்கு இடையேயான ராஜதந்திர விவகாரங்கள் பிளவுபட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி, அரசாங்க ரீதியாக லட்சத்தீவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
கூடவே, அந்த தீவுகளின் எழில்கொஞ்சும் இயற்கை பற்றியும், அழகிய வெண்மணல் திட்டுகள் பற்றியும் புகழ்ந்த மோடி, அந்த தீவுகளுக்கு சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தரவேண்டும் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்தை, மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சிக்கவே, விவகாரம் வேறு விதமாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
இந்தியாவின் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பலரும், மாலத்தீவுகளுக்கு பதிவு செய்யப்பட்டிருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
அதோடு, பிரபலங்கள் பலரும் மாலத்தீவை விட, இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு செல்லவே விருப்பம் என வெளிப்படையாக தெரிவித்தனர்.
card 2
சுற்றுலாவே, மாலத்தீவு பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம்
இந்தாய்வின் இந்த அதிரடி சுற்றுலாப் புறக்கணிப்பால், மாலத்தீவு சற்றே அதிர்ந்தது என கூறலாம்.
காரணம், அந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம் சுற்றுலாத்துறையே.
கடந்த ஆண்டில், இந்திய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மாலத்தீவில் அதிகமாக இருந்தது எனவும், கொரோனா காலத்திற்கு பிறகு, இந்தியா சுற்றுலுவாசிகளாலேயே பொருளாதாரம் முன்னேறியது என கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி, 520,000 மக்கள்தொகை கொண்ட சிறிய தீவு நாடான மாலத்தீவு, உணவு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியாவையே பெரிதும் நம்பியுள்ளது.
இந்த இராஜதந்திர தகராறு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் என்று மாலத்தீவு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவுடனான விவகாரத்தை தங்கள் நாட்டு அரசு சரியாக கையாளவில்லை என நாட்டு மக்களும், எதிர்கட்சியினரும் கருதுகிறார்கள்.