ரூ.10 லட்சம் விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சோனெட் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது கியா
செய்தி முன்னோட்டம்
எஸ்யூவி ரக கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கியா இந்தியா நிறுவனம், தனது பிரபலமான சோனெட் (Sonet) காரில் புதிய மலிவு விலை ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய கார் சந்தையில் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கியா நிறுவனம் தனது சோனெட் மாடலில் விலை குறைவான ஆட்டோமேட்டிக் கார் வரிசையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டு இஞ்சின் தேர்வுகளிலும் இந்த புதிய வேரியண்ட்கள் கிடைக்கின்றன.
கியா
விலை விவரம்:
டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காம்போவை இப்போது ரூ.9.78 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அதேபோல், டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காம்போவை இப்போது ரூ.9.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில், டர்போ டீசல் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்களுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுவது இந்த செக்மெண்டிலேயே இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.